Home நாடு நெகிரி செம்பிலான் மந்திரி பெசாராக முகமட் ஹாசான் மீண்டும் நியமனம்!

நெகிரி செம்பிலான் மந்திரி பெசாராக முகமட் ஹாசான் மீண்டும் நியமனம்!

683
0
SHARE
Ad

Menteri-Besar-Dato’-Sri-Mohamad-Hasan-300x225மே 11 – நெகிரி செம்பிலான் தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசான் (படம்) மூன்றாவது தவணையாக இன்று மீண்டும் நெகிரி செம்பிலான் மந்திரி பெசாராக பதவியேற்றுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

நெகிரி செம்பிலான் ஆளுநர் துங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் முன்னிலையில் முகமட் ஹாசான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

57 வயதான முகமட் ஹாசான் நெகிரி செம்பிலான் மாநில அம்னோ தலைவருமாவார்.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளில் 22 தொகுதிகளை தேசிய முன்னணி  கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் அது மீண்டும் ஆட்சியமைக்கின்றது.

அப்துல்லா படாவி பிரதமராக இருந்தபோது 2004ஆம் ஆண்டில் நெகிரி செம்பிலான் மந்திரி பெசாராகப் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் மந்திரி பெசாராக தொடர்ந்த முகமட் ஹாசான் தற்போது மூன்றாவது தவணையாக பதவியேற்கின்றார்.

ஜெரம் பாடாங் சட்டமன்ற தொகுதியில் ம.இ.கா சார்பாக வென்ற மாணிக்கம் லட்சுமணன் நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழுவில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ப தான் மாநில ஆட்சியை எல்லா இனங்களுக்கும் பொதுவாக திறம்பட நடத்துவேன் என்று முகமட் ஹாசான் தனது பதவியேற்பு விழாவில் உரையாற்றும் போது கூறினார்.