கோலாலம்பூர், மே 15 – யாருக்கு எந்த அமைச்சு – யாருக்கெல்லாம் வாய்ப்பு என பல்வேறு ஆரூடங்கள் எழுப்பப்பட்டுள்ள வேளையில், புதிய அமைச்சரவைக்கான பட்டியலுடன் பிரதமர் நஜிப் இன்று மாமன்னரைச் சந்திக்கின்றார்.
இன்று தனது அமைச்சரவைப் பட்டியலுக்கான ஒப்புதலைப் பெற்றவுடன், இன்று பிற்பகல் அவர் தனது பட்டியலை அறிவிப்பார் என்றும், நாளை புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் பதவியேற்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது,
மோசமான தேர்தல் தோல்விகளுக்காக,
ஒரு பக்கம் தான் சார்ந்துள்ள கட்சியான அம்னோவிலிருந்து எதிர்ப்பு – இன்னொரு பக்கம் அன்வார் இப்ராகிம் தலைமையில் நாடு முழுமையிலும் நடத்தப்பட்டு வரும் “கறுப்பு 505” மக்கள் போராட்டம் –
என இரண்டு முனைகளிலும் சிக்கித் தவிக்கும் நஜிப்புக்கு தற்போது இருக்கும் ஒரு நல்ல வாய்ப்பு சிறந்த அமைச்சரவை ஒன்றை வழங்கி அதன்மூலம் மக்களின் கவனத்தை திசை திருப்புவதுதான்.
மக்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய சிறந்த அமைச்சரவைக் குழுவினரை நியமித்து.
அதன் மூலம் தான் எப்போதும் கூறிவரும் உருமாற்றுத் திட்டங்களை, நாடு வளம் பெறும் ஒற்றுமைப்படுத்தப்படும் திட்டங்களை செயலாக்கினால்,
அதன் மூலம் மக்களின் அபிமானத்தையும், ஆதரவையும் நஜிப் ஓரளவுக்குப் பெற்றுவிட முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.