Home அரசியல் புதிய ம.இ.கா தலைமைச் செயலாளராக சக்திவேல் நியமனம்!

புதிய ம.இ.கா தலைமைச் செயலாளராக சக்திவேல் நியமனம்!

602
0
SHARE
Ad

Sakthivel-Sliderமே 15 – ம.இ.கா.வின் தலைமைச் செயலாளர் பதவியை எஸ்.முருகேசன் ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, கட்சியின் புதிய தலைமைச் செயலாளராக பூச்சோங் ம.இ.கா தொகுதியின் தலைவர் ஏ.சக்திவேல் (படம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் ம.இ.காவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அறிவித்துள்ளார்.

ம.இ.கா பூச்சோங் தொகுதியின் தலைவரான சக்திவேல், நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் காப்பார் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு பிகேஆர் கட்சியின் மணிவண்ணனிடம் தோல்வி கண்டார்.

#TamilSchoolmychoice