Home வாழ் நலம் ஆழ்ந்த உறக்கம் அவசியம்

ஆழ்ந்த உறக்கம் அவசியம்

1110
0
SHARE
Ad

kids-sleepகோலாலம்பூர், மே 17- மனிதனின் இயந்திர வாழ்க்கையில் வேலைபலு மற்றும் மனழுத்தம் காரணமாக சரியாக தூங்க முடியாமல் தவிக்கின்றனர்.

சரியான தூக்கம் இல்லாவிட்டால் பலவிதமான உடல் நலக்கோளாறுகள் மற்றும் ஆரோக்கிய பிரச்சினைகளை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும்.

சாதாரணமாக ஆறு மணி நேரம் உறங்க்கினால் போதும் என்று கூறுவார்கள் ஆனால் அது ஆழ்ந்த உறக்கத்தை குறிக்கும், அதாவது படுத்தவுடன் யாரும் உறங்குவதில்லை அதற்கு அதிகபட்சமாக எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகும்.

#TamilSchoolmychoice

அதனால் குறைந்தது எட்டு மணி நேரமாவது உறங்க செல்வது நல்லது. தூக்கப் பிரச்சனையை ஒரு சில செயல்களின் மூலம் சரிசெய்யலாம்.

பொதுவாக தாமதமாக படுக்கைக்கு சென்று தாமதமாக எழுந்திருத்தல் அல்லது சீக்கிரம் படுத்து சீக்கிரம் எழுதல் என்பதை ஒரு முறையாக செய்தல் மிக அவசியம். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை பின்பற்றி வரலாம். இதனையே வழக்கமாக தொடர்ந்தால் நன்றாக தூங்க வாய்ப்புள்ளது.

எங்கு இடம் மாறி சென்றாலும் இந்த பழக்கத்தை தொடர வேண்டும். சிலருக்கு புது இடம் சென்றால் தூக்கம் வராது என்பார்கள் ஆனால் நாம் சரியான நேரத்தில் தூங்க செல்வதாலும் சரியான நேரத்தில் எழுந்திருப்பதாலும் நாம் ஆரோக்கியமான அழ்ந்த தூக்கத்தைப் பெற முடியும்.

காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தல் உடலுக்கு ஒருவகையான புத்துணர்ச்சியை கொடுக்கும். நடைபயிற்சி, ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது பளு தூக்குதல் என்று வெறும் 20-30 நிமிடங்கள் ஏதாவது ஒரு வேலையை செய்தால் போதும் இரவில் உடல் சோர்வடைந்து நன்றாக தூங்க முடியும்.

அதே போல் நாம் இரவு தூங்கும் முன்னும், சாப்பிட்ட பிறகும் 20-30 நிமிடம் நடை நடத்தல், சூடான குளியல் போன்றவைற்றை செய்தால் உடல் தளர்த்து ஒரு விதமான புத்துணர்ச்சியுடன் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

இரவில் அதிக தண்ணீர் குடிப்பதை தவிர்த்தல் நல்லது பகலில் அல்லது காலையில் எழுந்ததும் அதிகம் தண்ணீர் குடிக்கலாம். இரவில் அதிக தண்ணீர் குடிப்பதால் நள்ளிரவில் சிறுநீர்க் கழிக்க எழுந்திருக்க வேண்டியிருக்கும், அதனால் தூக்கம் பாதியில் கெட்டு மீண்டும் தூங்க நேரமாகும்.

மேலும் காலையில் நல்ல தூக்கம் வந்து பின் எழுந்திருக்க முடியாமல் வேலைகள் அனைத்தும் சோர்வாக இருக்கும்.

இரவில் கார்போஹைட்ரேட் கொண்ட எளிதான உணவை சாப்பிடுவது நல்லது. பால் மற்றும் ஒரு சிறிய கிண்ணத்தில் தானியம் என்று இரவில் சாப்பிடுவதால் நிம்மதியான தூக்கம் நிச்சயமாக கிடைக்கும்.

இரவில் கொழுப்பு மற்றும் புரதச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கலாம். ஏனெனில் அவை இரவில் ஜீரணமாகாமல் இருந்தால் தூக்கம் கெட்டு விடும்.

நல்ல தரமான தலையணை மற்றும் மெத்தையை வாங்கி தூங்கலாம், இதனாலும் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும், இரைச்சல் மற்றும் வெளிச்சம் தூக்கத்தை கெடுக்கும் எனவே உறங்கும் அறையில் வெளிச்சம் மற்றும் இறைச்சல் இல்லாதவாறு செய்து கொண்டு பின் தூக்கத்தை தொடர்ந்தால் நல்ல தூக்கத்தை பெற முடியும்.