Home நாடு சபா கள்ளக் குடியேறிகள் – அரசியல் ஆணையம் திங்கட்கிழமை கூடுகின்றது

சபா கள்ளக் குடியேறிகள் – அரசியல் ஆணையம் திங்கட்கிழமை கூடுகின்றது

657
0
SHARE
Ad

Sabah-RCIபெட்டாலிங் ஜெயா, மே 19 – சபாவில் கள்ளக் குடியேறிகளுக்கு சட்டவிரோதமாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது தொடர்பில் நடந்து வரும் அரச ஆணைய விசாரணை மீண்டும் நாளை திங்கட்கிழமை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பொதுத் தேர்தல், மற்றும் லகாட் டத்துவில் நடந்த ஊடுருவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த ஆணையத்தின் விசாரணை மே 29 வரை எட்டு நாட்களுக்கு கோத்தா கினபாலுவில் நடத்தப்படும் என அரச ஆணையத்தின் செயலாளர் டத்தோ சரிபுடின் காசிம் அறிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி நீண்ட நாளாக சர்ச்சையில் இருந்து வரும் சட்டவிரோத அடையாள அட்டைபிரச்சனை குறித்து விசாரிக்க அரச ஆணையம் ஒன்று அமைக்கப்படும் என பிரதமர் அறிவித்திருந்தார்.