புதுடெல்லி, மே 19- இந்திய லடாக் எல்லையில் சீனா அத்துமீறியதை இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது.
பின்னர் இரு நாடுகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் அது முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் இன்று சீனாப்பிரதமர் லீ கெகியாங் இந்தியா வருகிறார்.
இதையொட்டி இந்திய வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஷித் கூறியதாவது:-
இரு நாடுகளிடையே பல்வேறு பிரச்சினைகளில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இருந்தும் அவைகளில் நாம் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.
மேலும் சீனாவுடன் உறவை மேம்படுத்த ஒரு புதிய அத்தியாயத்துடன் நடந்து கொள்ள இந்தியா தயாரக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.