Home இந்தியா செப்டம்பரில் அமெரிக்கா செல்கிறார் பிரதமர்

செப்டம்பரில் அமெரிக்கா செல்கிறார் பிரதமர்

509
0
SHARE
Ad

manmohan-singhபுதுடெல்லி, மே 19-  பிரதமர் மன்மோகன் சிங் வரும் செப்டம்பரில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சர் வில்லியம் பர்ன்ஸ், கடந்த வாரம் இந்தியா வந்திருந்தார்.

பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த அவர், அமெரிக்காவுக்கு வரும்படி அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதை மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டார். வரும் செப்டம்பரில் நியூயார்க் நகரில் நடக்கும் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ள மன்மோகன் சிங் செல்கிறார்.

அப்போது, அமெரிக்காவிலும் சுற்றுப் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெரி அடுத்த வாரம் இந்தியா வரும்போது பிரதமரின் சுற்றுப்பயண தேதிகள் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.