Home கலை உலகம் ஹன்சிகாவை போல் கொழு கொழுவென வர துடிக்கும் ப்ரியா ஆனந்த்

ஹன்சிகாவை போல் கொழு கொழுவென வர துடிக்கும் ப்ரியா ஆனந்த்

1128
0
SHARE
Ad

priya-anandமே 20- ஹன்சிகாவை போன்று கொழு கொழுவென வரவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறாராம் ப்ரியா ஆனந்த்.

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நடிகைகள் குண்டாக இருந்தால் மட்டுமே முன்னணி இடத்தை பிடிக்க முடியும் என்பது எழுதி வைக்கப்பட்ட தீர்ப்பு.

அதனால் தமிழுக்கு வரும் நடிகைகள் முதலில் குஷ்பூவை தங்களது  முன்மாதிரியாக கொள்கின்றனர்.

#TamilSchoolmychoice

அதையடுத்துதான் சரியான படத்தை தேர்ந்தெடுத்து தமிழ் திரையுலகிற்கு வருகிறார்கள்.

ஆனால் ஹன்சிகாவை பொறுத்தவரை வரும் போது குஷ்பூவை விடவும் குண்டாக வந்தார்.

ஆனால், நாளடைவில் சற்று குறைத்து தமிழ்நாட்டு ரசிகர்களின் ரசனைக்கு  ஏற்ற நடிகையாக தன்னை உருவாக்கி கொண்டார்.

இந்நிலையில் எதிர்நீச்சல் நாயகி ப்ரியா ஆனந்த், தமிழில் நிலையான இடத்தை பிடிக்க வேண்டுமென்றால் உடல் பெருக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டு தனது ஒல்லிக்குச்சி உடம்பை குண்டாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளாராம்.

அதனால் இதுவரை அடிக்கடி காத்து வாங்க ஜிம்முக்கு சென்று வந்த ப்ரியா, இப்போது அந்த பக்கம் தப்பித்தவறியும் செல்வதில்லையாம்.

உடம்பை புஷ்டியாக்கும் பனிக்கூழ்  மற்றும் அசைவம் ஆகியவற்றை சாப்பிட்டு  வருகிறாராம்.

கூடிய சீக்கிரமே நானும் ஹன்சிகா மாதிரி கொளு கொளு உடம்புக்காரியாக மாறி, கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்குவேன் என்கிறாராம் ப்ரியா ஆனந்த்.