Home நாடு ஆர்.சி.ஐ விசாரணை: சபாவில் மட்டும் 66,000 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது – சரவாக் மாநிலத்தை விட...

ஆர்.சி.ஐ விசாரணை: சபாவில் மட்டும் 66,000 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது – சரவாக் மாநிலத்தை விட 11 மடங்கு அதிகம்

659
0
SHARE
Ad

mole-RCI-SABAH-2கோத்தா கினபாலு, மே 20 – சபா மாநிலத்தில் கடந்த 1963 ஆம் ஆண்டுக்கும், 2012  ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமைகளின் எண்ணிக்கை,  அதே காலகட்டத்தில் சரவாக் மாநிலத்தில் வழங்கப்பட்ட குடியுரிமைகளின் எண்ணிக்கையை விட 11 மடங்கு அதிகம் என அரச ஆணைய  விசாரணையின் (Royal Commission of Inquiry) மூலம் தெரியவந்துள்ளது.

சபாவில் கள்ளக் குடியேறிகளுக்கு சட்டவிரோதமாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது தொடர்பான அரச ஆணைய விசாரணை கோத்தா கினபாலு உயர் நீதிமன்றத்தில் தற்போது நடந்து வருகிறது .

அதில்  63-வது சாட்சியான சரவாக் தேசியப் பதிவுத் துறை இயக்குனர் அபு பக்கர் மாட், சரவாக்கில் 5,373  பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஆனால் அதே காலகட்டத்தில்  சாபாவில்  66,000 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது என்று விசாரணை அதிகாரி மனோஜ் குருப் இன்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எப்படி இவ்வளவு வேறுபாடு வந்தது என்று விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அபு பக்கர், சபா மாநிலத்தின் எல்லைகளை எளிதாக கடந்து விடுவது காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சரவாக் மாநிலம் அமைந்துள்ள இடமும், அதன் அரசியலமைப்பும் சபாவை விட சற்று வேறுபட்டிருக்கிறது என்றும், சபா மாநிலம் பிலிப்பைன்ஸூக்கு மிக அருகில் இருப்பது தான் அங்கு அதிக அளவில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் கள்ளத் தனமாகக் குடியேறக் காரணம் என்றும் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

“சபா மாநில எல்லைகளின் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் பலப்படுத்துவதன் மூலம் கள்ளத்தனமாகக் குடியேறுபவர்களைத் தடுக்கலாம். அதே நேரத்தில் சரவாக்கில் குடியுரிமை பெற சட்டரீதியான அறிவிப்புக்களைக் கொண்ட ஆதாரங்கள் மட்டும் போதுமானதாக இருக்காது.

பிறப்பு சான்றிதழ்கள் இல்லாதவர்கள் அவர்கள் பிறந்த கிராமத்தின் தலைவர்களிடமிருந்து ஒப்புதல் கடிதம் வாங்கி வரவேண்டும். ஒவ்வொரு கிராமத் தலைவரும் விசாரணை அதிகாரிகளின் மூலம் நேர்காணல் செய்யப்பட்ட பின்னரே குடியுரிமை வழங்கப்படும்” என்றும் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.