Home அரசியல் அச்சுறுத்தல்கள் வேலைக்கு ஆகாது – சாஹிட்டுக்கு ரம்லி பதிலடி

அச்சுறுத்தல்கள் வேலைக்கு ஆகாது – சாஹிட்டுக்கு ரம்லி பதிலடி

579
0
SHARE
Ad

Rafizi Ramliபெட்டாலிங் ஜெயா, மே 20 – பக்காத்தானின் சட்டத்துக்குப் புறம்பான பேரணிகளில் கலந்து கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் விடுத்திருந்த  அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இன்று கருத்து தெரிவித்துள்ள பிகேஆர் வியூக இயக்குனரான ரபீஸி ரம்லி,

“அச்சுறுத்துவதாலும், பயமுறுத்துவதாலும் பக்காத்தான் பேரணிகளில் கலந்து கொள்ள வரும் ஆதரவாளர்களை தடுத்து நிறுத்தி விட முடியாது. கடந்த 1990 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டதற்குப் பிறகு தன்னுடைய குரலைத் தாழ்த்திக் கொண்ட சாகிட் தான் உண்மையில் பயப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “எச்சரிக்கை விடுத்த காலங்கள் நிறைவடைந்து விட்டன. இனி நேரடியான நடவடிக்கைகள் தான்” என்று சாஹிட் விடுத்திருந்த அறிக்கை குறித்து விமர்சித்த ரம்லி, “இனி அது போன்ற அச்சுறுத்தல்கள் வேலைக்கு ஆகாது” என்றும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதோடு பக்காத்தான் பேரணிக்களுக்கு காவல்துறையினரே நேரடியாக ஒத்துழைப்பு கொடுத்துவருகின்றனர் என்றும், காவல்துறையினரின் பணிகளில் சாஹிட் தலையிட வேண்டாம் என்றும் ரம்லி தெரிவித்துள்ளார்.