Home கலை உலகம் மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் தத் புனே சிறைக்கு மாற்றம்

மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் தத் புனே சிறைக்கு மாற்றம்

601
0
SHARE
Ad

sanjay-duttமும்பை, மே 22- மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத், மும்பை தடா நீதிமன்றத்தில்  கடந்த 16-ம் தேதி சரண் அடைந்தார்.

பின்னர் அவர் மும்பை ஆர்தர் சாலை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு ஒரு மாதத்திற்கு வீட்டு சாப்பாடு, மெல்லிய படுக்கை விரிப்பு, தலையணை மற்றும் மருந்துகள் வழங்குவதற்கு மும்பை  நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், இன்று மும்பை ஆர்தர் சாலை சிறையிலிருந்து புனேவில் உள்ள எரவாடா சிறைக்கு சஞ்சய்தத் மாற்றப்பட்டார்.

#TamilSchoolmychoice

6 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து சஞ்சய்தத் டெல்லி உயர் நீதிமன்றத்தில்   மனுதாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம்  அவரது தண்டனையை 5 ஆண்டாக குறைத்தது.

சஞ்சய்தத் ஏற்கனவே 1 1/2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவித்து ஜாமீனில் விடுதலையானார். எனவே அவர் மீதம் 3 1/2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும்.