ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்கள், 11 தரகர்கள் போலீஸ் காவல் நேற்றுடன் முடிந்தது. அவர்கள் நேற்று டெல்லி மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் தனது வக்கீல் ரெபக்கா ஜாண் மூலம் ஸ்ரீசாந்த் ஈமெயில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில் கூறியிருப்பதாவது:-
நான் எந்த ’ஸ்பாட் பிக்சிங்’கிலும் ஈடுபடவில்லை. எந்த தப்பும் செய்யவில்லை. நான் ஒரு நிரபராதி. விசாரணைக்கு பின்னர் நிச்சயம் என்னுடைய பெயர் நீக்கப்படும் என்று நம்புகிறேன்.
என்னுடைய வாழ்க்கையில் இது ஒரு கடினமான காலம். இந்திய நீதித்துறை மீது நான் அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். நான் நிரபராதி என்று நிரூபித்து என்னுடைய பெயரையும், புகழையும் தக்க வைப்பேன் என்று கூறியுள்ளார்.