Home உலகம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இம்ரான்கான் வீடு திரும்பினார்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இம்ரான்கான் வீடு திரும்பினார்

577
0
SHARE
Ad

IMRANஇஸ்லாமாபாத், மே 22- பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான்.

இவர் பாகிஸ்தான் தெக்ரிக்- இ- இன்சாப் என்ற கட்சியை நடத்தி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அவரது கட்சி 3-வது இடத்தை பிடித்தது.

தேர்தலுக்கு 4 நாட்களுக்கு முன்பு அதாவது 7-ந்தேதி லாகூரில் நடந்த தனது கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு இம்ரான்கான் சென்றார்.

#TamilSchoolmychoice

அவர் பேச மிக உயரத்தில் மேடை போடப்பட்டிருந்தது. எனவே, அங்கு செல்ல அமைக்கப்பட்டிருந்த  மிந்தூக்கியில் ஏறினார். ஆனால் அதில் இருந்து அவர் கீழே தவறி விழுந்தார்.

இதனால் அவரது முதுகு தண்டில் முறிவு ஏற்பட்டது. உடனே அவரை லாகூரில் உள்ள மருத்துவமனையில்  சேர்த்து தீவிர சிகிச்சை அளித்தனர். படுத்த படுக்கையாக இருந்ததால் தேர்தலில் அவர் வாக்களிக்கவில்லை.

இந்த நிலையில் டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சை காரணமாக இம்ரான்கான் குணமடைந்தார். இன்று அவர்  மருத்துவமனையிலிருந்து   விடைபெற்றுக்கொண்டு வீடு திரும்பினார்.