Home கலை உலகம் ஸ்ரீசாந்த கவுரவ வேடத்தில் நடித்த காட்சிகள் மலையாள படத்தில் இருந்து நீக்கம்

ஸ்ரீசாந்த கவுரவ வேடத்தில் நடித்த காட்சிகள் மலையாள படத்தில் இருந்து நீக்கம்

531
0
SHARE
Ad

SREESANTHதிருவனந்தபுரம், மே 23- கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கி சிறை சென்றுள்ள ஸ்ரீசாந்த், பிரபல மலையாள கவிஞரும் இசையமைப்பாளருமான கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி இயக்கத்தில் உருவாகும் ‘மழவில்லினட்டம் வரே’ (வானவில்லின் நுனி வரை) என்ற மலையாள திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார்.

‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்ட சர்ச்சையில் ஸ்ரீசாந்தின் பெயர் இடம்பெற்றவுடன் அவர் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டதாக படத்தின் இயக்குநர் நேற்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி கூறுகையில், ஸ்ரீசாந்த் இந்தியாவின் சிறந்த வேகப் பந்து வீச்சாளர். அவர் எனது நல்ல நண்பர்களுள் ஒருவர். எனவே, எனது படத்தில் அவரை கவுரவ வேடத்தில் நடிக்க வைத்தேன்.

#TamilSchoolmychoice

தற்போது, வரும் செய்திகளை கருத்தில் கொண்டு அவர் நடித்த காட்சிகளை நீக்கி விட்டோம்.

பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் இந்தியாவுக்கு வரும்போது அவரது வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படுகிறது. இதை சுற்றித்தான் படத்தின் கதைக் களம் அமைந்துள்ளது.

இந்திய அணியின் வீரர்களில் ஒருவராக கவுரவ வேடத்தில் ஸ்ரீசாந்த் நடித்திருந்தார்.

இந்த படத்தில் லண்டனை சேர்ந்த இசையமைப்பாளர் அப்பாஸ் ஹசன் கதாநாயகனாகவும், அர்ச்சனா கவி கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். வரும் செப்டம்பர் மாதம் இந்த படம் ரிலீஸ் ஆகிறது’ என்றார்.