Home உலகம் இனங்களுக்கு எதிராக நாம் ஒருபோதும் போராட்டம் நடத்தவில்லை! மாத்தளையில் ஜனாதிபதி

இனங்களுக்கு எதிராக நாம் ஒருபோதும் போராட்டம் நடத்தவில்லை! மாத்தளையில் ஜனாதிபதி

581
0
SHARE
Ad

rajapaseமே 23- தீவிரவாதிகளிடமிருந்து இலங்கையை மீட்பதற்காகவே நாம் போராட்டங்களை மேற்கொண்டோம் இனங்களுக்கு எதிராக அல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

மாத்தளையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

#TamilSchoolmychoice

நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களது சமூக மற்றும் சமய சுதந்திரம் உயர்ந்த அளவில் பாதுகாக்கப்பட வேண்டும்.

நான் சமயத்தை மதிக்கிறேன், நான் மற்றவர்களில் மீது வஞ்சம் கொள்வதில்லை. மக்களுக்கு எதிராக நாம் ஒரு போதும் போராடவில்லை.

நாட்டில் உள்ள அனைவரும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகவே பயங்கரவாதிகளிடம் நாட்டை மீட்கப் போராட்டங்களை நடத்தினோம். வேறு இனங்களுக்கு எதிராக போராடவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.