Home இந்தியா அ.தி.மு.க. நிர்வாகிகள் மரணம்- ஜெயலலிதா இரங்கல்

அ.தி.மு.க. நிர்வாகிகள் மரணம்- ஜெயலலிதா இரங்கல்

507
0
SHARE
Ad

jeyaaசென்னை, மே 23- அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல் – அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் வே.சுந்தரமூர்த்தி சாலை விபத்தில் அகால மரண மடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டும், திண்டுக்கல் நகர எம்.ஜி.ஆர். மன்றப் பொருளாளரும், 1-வது வார்டு கழக மேலமைப்பு பிரதிநிதியுமான நாகரத்தினம், நன்னிலம் ஒன்றியம், கோவில் திருமாளம் ஊராட்சிக் கழக செயலாளர் மாரிமுத்து ஆகியோர் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டும் மிகுந்த வருத்தமுற்றேன்.

அன்பு சகோதரர்கள் சுந்தரமூர்த்தி, நாகரத்தினம், மாரிமுத்து ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு முதல்- அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.