கொழும்பு, மே.23- இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக இந்தியா 50 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கிறது.
இதில் பட்டிகோலா பகுதியில் கட்டப்பட்ட 4 ஆயிரம் வீடுகள் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. அதில் அதிபர் ராஜபக்சேவின் தம்பியும், இலங்கை மந்திரியுமான பசில் ராஜபக்ச (படம்)கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இலங்கைக்கு இந்தியா மிகவும் நட்பு நாடாக உள்ளது. எங்களது வளர்ச்சியில் இந்தியா எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. இலங்கைக்கு ஒன்று என்றால் உதவி செய்வதில் முதன்மை நாடாக இந்தியா உள்ளது.
போருக்கு பிறகு நாங்கள் செய்த மறுவாழ்வு திட்டங்களை இந்தியா பாராட்டி உள்ளது. இலங்கையில் இந்தியா தூதராக இருந்த அசோக் கந்தா இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சிறப்பாக செய்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.