Home இந்தியா ஐ.பி.எல் இறுதிப்போட்டிக்காக ரூ.1500 கோடி வரை பந்தயம்

ஐ.பி.எல் இறுதிப்போட்டிக்காக ரூ.1500 கோடி வரை பந்தயம்

561
0
SHARE
Ad

iplபுதுடெல்லி, மே 24- சூதாட்ட புகார் தொடர்பாக நாடு முழுவதும் நடைபெற்று வரும் போலீசார் விசாரணையை கண்டு கொள்ளாமல், ஐ.பி.எல் இறுதிப்போட்டிக்காக ரூ.1500 கோடி வரை பந்தயம் கட்டப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இறுதிப்போட்டிக்கான பந்தய தொகை ஏற்கனவே வசூலிக்கப்பட்டு விட்டதாகவும் சூதாட்ட கும்பல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரூ.1500 கோடி வரை பந்தயம் கட்டப்பட்டிருந்தாலும் அதனை போலீசார் கண்டுபிடிக்காத வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சூதாட்ட கும்பல் உறுதியுடன் கூறியுள்ளது.

மத்திய அரசும், கிரிக்கெட் வாரியமும் உரிய நடவடிக்கை எடுக்காதது சூதாட்டம் தொடர்வதற்கு காரணம் என பாரதிய ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.

#TamilSchoolmychoice

ஆனால் இந்த விவகாரத்தில் போலீஸ் விசாரணை தீவிரமாகவும், வேகமாகவும் நடந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஐ.பி.எல் போட்டி தடை செய்வதன் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த்தின் சொத்துகள் முடக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.