Home இந்தியா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தலைவர் பதவியை துறக்கமாட்டேன்- சீனிவாசன்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தலைவர் பதவியை துறக்கமாட்டேன்- சீனிவாசன்

613
0
SHARE
Ad

srinivasanபுதுடெல்லி, மே 25- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதலாளியும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான என். சீனிவாசனின் மருமகனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரியான குருநாத் மெய்யப்பனை ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட புகார் தொடர்பாக, மும்பை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

அவரின் மீது கூட்டுச்சதி, மோசடி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குருநாத் மெய்யப்பனை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் என். சீனிவாசன் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

நான் எந்த தவறையும் செய்யவில்லை. எனவே நான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தலைவர் பதவியிலிருந்து விலகுவது என்கிற கேள்விக்கு இடமில்லை. நான் என் மனசாட்சிப்படி நடக்கிறேன்.
என் மருமகன் மூலம் நான் குறி வைக்கப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

எனது மருமகன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எந்த செய்தியையும் நான் பெற்று இருக்கவில்லை என்று என். சீனிவாசன் முன்னதாக கூறியுள்ளார்.