Home இந்தியா ஐ.பி.எல். சூதாட்டப்புகாரை விசாரிக்க முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு நியமனம்

ஐ.பி.எல். சூதாட்டப்புகாரை விசாரிக்க முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு நியமனம்

549
0
SHARE
Ad

iplபுதுடெல்லி, மே 29-நடந்து முடிந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சீனிவாசனின் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, மற்றும் ஆங்கீட் சவான் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகள் மீதான சர்ச்சைகள் குறித்து அதில் ஈடுபட்டவர்கள் மற்றும் அந்த அணியின் முதலாளிகளிடம் விசாரிப்பது தொடர்பாக மூன்று நபர் குழு ஒன்றை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அமைத்துள்ளது.

#TamilSchoolmychoice

அதில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் டி. ஜெயராம் சௌதா, ஆர். பாலசுப்பிரமணியன் மற்றும் பி.சி.சி.ஐ. செயலாளர் சஞ்சய் ஜக்தேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவானது விரைவில் விசாரணையை தொடங்கும் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.