Home இந்தியா ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மஸ்ரீ விருது: பிரதமர் மன்மோகன்சிங் வழங்கினார்

ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மஸ்ரீ விருது: பிரதமர் மன்மோகன்சிங் வழங்கினார்

622
0
SHARE
Ad

manmohanடோக்கியோ, மே 29- ஜப்பானை சேர்ந்த தமிழ் மொழி அறிஞர் நோபுரு கரஷிமா என்பவருக்கு இலக்கியம் மற்றும் கல்விக்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் உடல்நலம் சரிஇல்லாததால் அவரால் டெல்லியில் நடந்த விழாவுக்கு வரமுடியவில்லை.

எனவே தற்போது ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங் டோக்கியோவில் நடந்த ஒரு விழாவில் கரஷிமாவுக்கு பத்மஸ்ரீ விருதினை வழங்கினார். கரஷிமா தற்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். அவர் பல ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்து தென் இந்திய வரலாறு குறித்து ஆய்வு செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

அப்போது சென்னை பல்கலைக்கழகத்தில் கல்வெட்டுகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார். கரஷிமாவுக்கு நன்றாக தமிழ் பேசவும் தெரியும்.