கோலாலம்பூர், மே 24 – நேற்று கைது செய்யப்பட்ட பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மற்றும் ஏபியு (Anything but Umno) தலைவர் ஹரீஸ் இப்ராகிம் மற்றும் பாஸ் கட்சியைச் சேர்ந்த தம்ரின் கப்பார் ஆகியோரை காவலில் வைத்து விசாரணை செய்ய வேண்டுமென்ற காவல்துறையினரின் கோரிக்கையை, நீதிபதி நிராகரித்ததை அடுத்து அவர்கள் மூவரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்கள் மூவரும் மே 13 ஆம் தேதி நடந்த தேர்தல் முறைகேடுகள் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராகப் பேசியதற்காக நேற்று கைது செய்யப்பட்டு ஜிஞ்சாங் காவல் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.
இதனையடுத்து எதிர்கட்சியைச் சேர்ந்த சுமார் 100 ஆதரவாளர்கள் ஜிஞ்சாங் காவல் நிலையத்திற்கு முன் திரண்டு அவர்களை விடுதலை செய்யக் கோரி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட எதிர்கட்சித் தலைவர்களின் சார்பாக வழக்கறிஞர்கள் என்.சுரேந்தரன், ஆர்.சிவராசா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.