கோலாலம்பூர், மே 27 – “வேதமூர்த்திக்கு துணையமைச்சர் பதவி வழங்கியுள்ளதை ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு என்றும் ஏற்றுக்கொள்ளாது” என்று அதன் தலைவர் டி.மோகன் தெரிவித்துள்ளார்.
“இந்திய சமுதாயத்திற்கு இதுவரை எதையும் செய்யாமல் 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததற்காக வேதமூர்த்திக்கு துணை அமைச்சர் பதவியா? எங்களின் உரிமைகளையும், சலுகைகளையும் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.” என்றும் டி.மோகன் கூறியுள்ளார்.
“மேலும் வேதமூர்த்திக்கு வேறு பதவி வேண்டுமானால் கொடுக்கட்டும் ஆனால் ம.இ.காவையும், இந்தியர்களையும், நாட்டையும் கேவலப்படுத்தியவருக்கு துணையமைச்சர் பதவி வழங்கியுள்ளதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
வேதமூர்த்தியின் நியமனத்தால் இந்தியர்கள் மிகவும் அதிருப்தி அடைந்திருப்பதை பிரதமர் உணரவேண்டும்.
நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு நகர்ப்புறத்தில் வாழ்கின்ற இந்தியர்களின் ஆதரவு 45 விழுக்காடும், தோட்டப்புறங்களில் வாழ்கின்ற இந்தியர்களின் ஆதரவு 80 விழுக்காடு மட்டுமே கிடைத்துள்ளது.தேசிய முன்னணி தேவையான மாற்றங்களைச் செய்யவில்லை என்றால் இந்தியர்களின் ஆதரவு மேலும் சரிய வாய்ப்பு உள்ளது” என்று டி மோகன் எச்சரித்துள்ளார்.