Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியச் சந்தை மீது சிங்கப்பூர் நிறுவனங்கள் ஆர்வம்

இந்தியச் சந்தை மீது சிங்கப்பூர் நிறுவனங்கள் ஆர்வம்

583
0
SHARE
Ad

tharmanசிங்கப்பூர், மே 27- இந்தியச் சந்தை வளங்களை ஆராய்வதில் சிங்கப்பூர் நிறுவனங்கள் ஆர்வமுடன் இருப்பதாக துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் (படம்) தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, வீடமைப்பு, திடக்கழிவு உள்ளிட்டவை மூலமான நகர்ப்புற வளர்ச்சி, தண்ணீர் சுத்திகரிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்த அந்நிறுவனங்கள் ஆர்வமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் நடைபெற்ற இந்திய பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் வெள்ளிவிழா கொண்டாட்ட நிகழ்சியில் திரு தர்மன் சிறப்புரையாற்றினார்.

#TamilSchoolmychoice

இந்தியாவின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் பேசிய அவர், ஆசியப் பொருளியல் புதுப்பிப்புப் பற்றி விளக்கினார்.

வளர்ந்து வரும் உலகப் பொருளியல் குறித்தும் பொருளியல் வளர்ச்சிக்கு ஆதரவாக நீண்ட கால நிதியை நாடுவதன் அவசியம் பற்றியும் திரு தர்மன் எடுத்துரைத்தார்.