Home அரசியல் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு பட்டியலுக்கு சுல்தான் ஒப்புதல் – காலிட் அறிவிப்பு

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு பட்டியலுக்கு சுல்தான் ஒப்புதல் – காலிட் அறிவிப்பு

553
0
SHARE
Ad

kalidசிலாங்கூர், மே 27 – சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு பட்டியலுக்கு அம்மாநில சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ்ஷா ஒப்புதல் அளித்துவிட்டதாக சிலாங்கூர் மந்திரி பெசார்  அப்துல் காலிட் இப்ராகிம் இன்று அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து  நாளை காலை 9.30 மணியளவில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு  உறுப்பினர்கள்  அனைவரும் கிள்ளான் இஸ்தானா ஆலம் ஷாவில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து காலிட் இப்ராகிம் இஸ்தானா புக்கிட் காயாங்கில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சிலாங்கூர் மாநில பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளை இன்று சந்தித்து ஆட்சிக் குழு பட்டியலுக்கு ஒப்புதல் கிடைத்தது குறித்து தெரிவிக்க உள்ளேன். மேலும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்திற்கான அவைத் தலைவர் நியமனத்திற்கும் சுல்தான் ஒப்புதல் அளித்துள்ளார்.” என்றும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் பாஸ் கட்சிக்கு 4 இடங்களும், பிகேஆருக்கு மூன்று இடங்களும் மற்றும் ஜசெக விற்கு மூன்று இடங்களும் வழங்கப்பட்டுள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, கட்சி உறுப்பினர்களிடம் கலந்தாலோசித்த பின்னரே அது பற்றி அறிவிக்கப்படும் என்று காலிட் தெரிவித்தார்.