Home அரசியல் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் கவனம் செலுத்துங்கள் – சாமிவேலு வலியுறுத்து

மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் கவனம் செலுத்துங்கள் – சாமிவேலு வலியுறுத்து

590
0
SHARE
Ad

Samy Velluகோலாலம்பூர், மே 31 – தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் உட்கட்சிப் பூசல்களைக் குறைத்துக்கொண்டு, ஒற்றுமையுடன் செயல்பட்டு புதிய திட்டங்களுடன் மக்களின் நம்பிக்கையைத் திரும்பப் பெறுவதில் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று ம.இ.கா கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு தெரிவித்துள்ளார்.

“மொத்தமுள்ள 13 கூட்டணிக் கட்சிகளை மறுசீரமைப்பு செய்யும் பொறுப்பை பிரதமர் நஜிப் துன் ரசாக்கிடமே விட்டுவிடக்கூடாது. மாறாக மலேசிய மக்கள், குறிப்பாக இளைய சமூதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதில் அனைத்து கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் பங்காற்ற வேண்டும்.

மக்கள் நலனுக்காக புதிய திட்டங்களை வகுக்க பிரதமருடன் இணைந்து அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு தர வேண்டும். எதிர்கட்சிகளின் குறைகூறலுக்கு செவிசாய்த்து, அரசாங்கத்தை தற்காப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர பயப்படக்கூடாது. அப்போது நமது ஒற்றுமையை அவர்களுக்கு நிரூபிக்க முடியும்” என்றும் சாமி வேலு வலியுறுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் “வீண் வாக்குவாதங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் இப்போது நேரமில்லை என்று குறிப்பிட்ட அவர், நாம் இன்னும் கடுமையான உழைக்க வேண்டிய நேரம் இது என்றும் தெரிவித்துள்ளார்.

அதோடு மலேசிய இந்திய சமூகத்திற்கு சொந்தமான ஒரு கட்சியாக ம.இ.கா இருக்க வேண்டுமானால், அதற்கான சீர்திருத்தங்களை உடனடியாக செய்ய வேண்டுமே தவிர ம.இ.கா உறுப்பினர் அல்லாதவர்கள் அரசாங்க நிர்வாகத்தில் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து வீண் சர்ச்சைகளை உருவாக்கக் கூடாது” என்றும் சாமிவேலு தெரிவித்துள்ளார்.