கோலாலம்பூர், மே 31 – தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் கடந்த மே 29 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மாணவப் போராட்டவாதியான முகமட் சாப்வான் அனாங், இன்று 5000 ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இன்று காலை ஜாலான் டூத்தா நீதிமன்றத்தில் அவரது சகோதரர் மற்றும் மனைவி மஸ்துரா அபு பக்கர் ஆகியோர் பிணைத்தொகை செலுத்தி அவரை விடுவித்தனர்.
தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக கடந்த மே 13 ஆம் தேதி நடைபெற்ற கருத்தரங்கில் அரசாங்கத்திற்கு எதிராகப் பேசியதற்காக சாப்வானோடு சேர்த்து எதிர்கட்சித் தலைவர் தியான் சுவா, ஏபியு (Anything but Umno) தலைவர் ஹரீஸ் இப்ராகிம், பாஸ் கட்சியைச் சேர்ந்த தம்ரின் கப்பார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை எதிர்த்து அவர்கள் நால்வரும் நீதிமன்றத்தில் விசாரணை கோரினர்.