Home நாடு மத்திய செயற் குழுத் தேர்வு – ஜசெக உறுப்பினர்கள் பலருக்கு அறிவிப்பு இல்லை

மத்திய செயற் குழுத் தேர்வு – ஜசெக உறுப்பினர்கள் பலருக்கு அறிவிப்பு இல்லை

621
0
SHARE
Ad

DAP1-300x202கோலாலம்பூர், மே 31 – தேசிய காங்கிரஸில் கலந்து கொள்ளத் தகுதியுள்ள பல ஜசெக உறுப்பினர்கள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை என்று சங்கப் பதிவதிகாரி அலுவலகத்தின் (ROS) விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதன் தலைமை இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஒத்மான் தெரிவித்துள்ளார்.

அக்கூட்டம் பற்றிய தகவல் கிடைக்காத ஜசெக உறுப்பினர்கள் கொடுத்த புகார்களை அடுத்து, இவ்விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“காங்கிரஸில் அவர்கள் விரும்பிய தலைவருக்கு வாக்களித்து தேர்ந்தெடுக்கும் உரிமை, தகவல் பெறாத ஜசெக உறுப்பினர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது” என்று அப்துல் ரஹ்மான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் சங்கப் பதிவதிகாரி அலுவலகம் இது தொடர்பான மற்ற புகார்களின் மீதும் விசாரணை நடத்தி, சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து, இறுதியாக சங்கங்கள் சட்டம் 1966 ன் படி, இக்காங்கிரஸ் செல்லுபடியாகுமா என்ற முடிவுக்கு வரும் என்றும் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கும் தகுதிபெற்ற 753 ஜசெக உறுப்பினர்கள் தங்களுக்கு கூட்டம் பற்றிய தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கொடுத்த புகார்களைத் தொடர்ந்து, அக்கூட்டத்திம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜசெக மத்திய செயற் குழு (Central Executive Committee) செல்லுபடியாகாது என்று கருத்து நிலவி வருகிறது.