Home நாடு எல்லா உறுப்பினர்களுக்கும் தகவல் கிடைத்தது என்று உத்திரவாதம் அளிக்க முடியாது – ஜசெக விமர்சனம்

எல்லா உறுப்பினர்களுக்கும் தகவல் கிடைத்தது என்று உத்திரவாதம் அளிக்க முடியாது – ஜசெக விமர்சனம்

634
0
SHARE
Ad

DAP1

கோலாலம்பூர், மே 31 – கடந்த வருடம் பினாங்கில் நடந்த ஜசெக தேசிய காங்கிரஸ் குறித்து பல உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப் படவில்லை என்ற  சங்கப்பதிவதிகாரி அலுவலகத்தின் (ROS) அறிக்கையை ஜசெக கடுமையாக விமர்சித்துள்ளது.

இது குறித்து ஜசெக தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளர் அந்தோனி லோக் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இவ்விவகாரம் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சங்கப்பதிவதிகாரி அலுவலத்திலிருந்து நேற்று தான் கடிதம் வந்தது.

#TamilSchoolmychoice

அதில் நான்கு கிளைகள் தங்களுக்கு தகவல் கிடைக்கவில்லை என்று புகார் அளித்திருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.

ஆனால் அதற்கு நாங்கள் பதிலளிப்பதற்குள் அவர்களாகவே ஜசெக வில் பலருக்கு தேசிய காங்கிரஸ் கூட்டம் பற்றி தகவல் தெரிவிக்கவில்லை என்று முடிவு செய்து பத்திரிக்கைகளுக்கு அறிக்கை விடுத்திருப்பது முறையற்றது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சங்கப்பதிவதிகாரி அலுவலகம் குறிப்பிட்ட அந்த நான்கு கிளைகளைச் சேர்ந்த மூன்று பிரதிநிதிகள் காங்கிரஸில் கலந்துகொண்டதற்கான ஆதாரங்களை செய்தியாளர்களிடம் காட்டிய அந்தோனி, “இவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றால் எப்படி கூட்டத்தில் கலந்துகொண்டனர்?” என்று கேள்வி எழுப்பினார்.

“முன்னாள் ஜசெக தேசிய ஒருங்கிணைப்பு செயலாளரான தெரேசா கோக், காங்கிரஸ் குறித்து பத்திரிக்கைகளுக்கு அறிக்கை விடுத்திருந்தார். ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் தகவல் கிடைத்தது என்று கட்சி உத்திரவாதம் அளிக்க முடியாது.

அப்படி என்றால் நடந்து முடிந்த பொதுத்தேர்தல் கூட முறையற்றது தான்.

காரணம் தகுதி வாய்ந்த வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவிக்கவில்லை” என்றும் லோக் தெரிவித்துள்ளார்.