Home நாடு கருணாநிதி சித்திரவதை செய்யப்படவில்லை – காவல்துறை உறுதி

கருணாநிதி சித்திரவதை செய்யப்படவில்லை – காவல்துறை உறுதி

528
0
SHARE
Ad

karunaசிரம்பான், ஜூன் 3 – தடுப்புக் காவலில் மரணமடைந்த பொறியியலாளர் கருணாநிதியின் மரணத்தில் எந்த விதமான மர்மமும் இல்லை என்று நெகிரி செம்பிலான் மாநில காவல்துறைத் தலைவர் ஒஸ்மான் சாலே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதோடு “பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வெளிவரவில்லை. எனவே இறப்பு குறித்து இதற்கு மேல் என்னால் விவரிக்க இயலாது. இது ஒரு திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கருணாநிதி இறந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை ” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் கண்காணிப்புக் கேமெரா மூலம் சோதனையிட்டதில் கருணாநிதி எந்த விதமான சித்திரவதைகளுக்கும் உள்ளாகவில்லை என்பதை தாங்கள் உறுதிபடுத்தியுள்ளதாகவும், எனவே பொதுமக்கள் வீணான வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் ஒஸ்மான் கேட்டுக்கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மனைவியைத் தாக்கிய குற்றத்திற்கான கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட கருணாநிதி மீது குற்றவியல் சட்டம் 324 பிரிவின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.