Home இந்தியா காங்கிரஸ் பிடியில் இருந்து இந்தியாவை மீட்பதே நமது கனவாக இருக்க வேண்டும்: மோடி பேச்சு

காங்கிரஸ் பிடியில் இருந்து இந்தியாவை மீட்பதே நமது கனவாக இருக்க வேண்டும்: மோடி பேச்சு

579
0
SHARE
Ad

பனாஜி, ஜூன் 10- கோவாவில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் தேர்தல் பிரசாரக்குழு தலைவராக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனத்திற்கு நன்றி தெரிவித்து மோடி பேசியதாவது:-

modi-narendraஎனக்கு கூடுதலாக ஒரு புதிய பொறுப்பை வழங்கியுள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு நன்றிக்கடன் பட்டவனாக உங்கள் முன் நிற்கிறேன். கட்சியின் தொண்டர்களின் பார்வையில் மட்டுமின்றி இந்த நாட்டு மக்களின் பார்வையிலும் எனக்கு அவர் மரியாதையை தேடித் தந்துள்ளார்.

#TamilSchoolmychoice

நாம் அனைவரும் கட்சியின் தொண்டர்கள். நமக்கு வழங்கப்படும் பொறுப்பு எத்தகையதாக இருந்தாலும் அதனை சிறந்த முறையில் நிறைவேற்றுவது நமது கடமையாகும். துவக்கம் நன்றாக இருக்க வேண்டும். நல்ல துவக்கமே.. பாதி வெற்றிக்கு சமம்.

எல்லா நிலைகளிலும் எனது பலவீனத்தை களைய கட்சி எனக்கு உதவி புரிந்துள்ளது. இன்று தேர்தல் பிரசாரக்குழு தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் பா.ஜ.க.வில் பதவி என்பது ஒரு பொறுப்பு. பதவிக்கும் பொறுப்புக்கும் நடுவே உள்ள இடைவெளியை நாம் சரியாக பராமரிக்க வேண்டும் என்பதை அனைவருக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் முதல் மந்திரிகள் யாரும் எந்த தவறும் செய்ததாக குற்றச்சாட்டுகள் இல்லை. ஊழல் செய்தவர்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் டெல்லியில் அமர்ந்துள்ளனர்.

ஆனால், அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதாக தெரியவில்லை. எதைப் பற்றியும் காங்கிரஸ் தீவிரம் காட்டுவதில்லை. இந்த நாட்டின் இளைஞர்களைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. காங்கிரஸ் பிடியில் இருந்து இந்தியாவை மீட்பதே நமது கனவாக இருக்க வேண்டும்.

கோவா மாநிலத்திற்கு என் இதயத்தில் நீங்காத இடம் உண்டு. கோவா எனக்கு அதிர்ஷ்டமான இடம் என்று பத்திரிகைகள் கூட கூறி வருகின்றன. 2002-ம் ஆண்டு இதே கோவாவில் நடைபெற்ற பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில்தான் குஜராத்திற்கு சேவை செய்யும் கட்டளை எனக்கு இடப்பட்டது.

இந்த அனுமதியை கோவா எனக்கு வழங்கியிராவிட்டால் குஜராத்திற்கு நான் சேவை செய்திருக்க முடியாது. கோவா தான் என்னை அப்போதும் ஆசீர்வாதம் செய்தது. இப்போதும் ஆசீர்வாதம் செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.