Home உலகம் உலகின் மிக வயதான ‘ஜப்பான் தாத்தா’ மரணம்

உலகின் மிக வயதான ‘ஜப்பான் தாத்தா’ மரணம்

681
0
SHARE
Ad

japan-1டோக்கியோ, ஜூன் 12- உலகின் மிக வயதான முதியவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற ஜிரோய்மன் கிமுரா ஜப்பானில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 116.

1897ம் ஆண்டு ஜப்பானில் பிறந்த கிமுரா, தனது இளமைப் பருவத்தில் தபால் துறை ஊழியராக பணியாற்றினார்.

Jiroemon-Kimuraதனது 115வது ஆண்டு பிறந்த நாள் விழாவின் போது நீண்ட ஆயுளுக்கு அதிக நேரம் சூரிய வெளிச்சத்தின் கீழ் நின்றிருப்பதுதான் காரணம் என்று அவர் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

2012-ம் ஆண்டு இவரை உலகின் மிக வயதான முதியவராக கின்னஸ் நிறுவனம் அங்கீகரித்தது.

இறுதிக் காலத்தை விவசாயம் செய்வதில் கழித்த கிமுரா இன்று மரணமடைந்தார்.

அவருக்கு 7 பிள்ளைகள், 14 பேரக் குழந்தைகள், 25 கொள்ளுப்பேரன் பேத்திகள், 15 எள்ளுப்பேரன் பேத்திகள் உள்ளனர்.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நூறு வயதை கடந்த சுமார் 50 ஆயிரம் பேர் ஜப்பானில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.