சென்னை, ஜூன் 12 – விஜயகாந்த் தலைமையில் இயங்கும் தே.மு.தி.க. கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருவது தொடர்கதையாகியுள்ளது.
அந்த வரிசையில் விருதுநகர் சட்டமன்ற தொகுதிதே.மு.தி.க. எம்.எல்.ஏ. பாண்டியராஜன் இன்று முதல்வர் ஜெயலலிதாவைசந்தித்து பேசியது அக்கட்சியினர் இடையே பெரும் அதி்ர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவை ஏற்கனவே தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அருண் பாண்டியன் (பேராவூரணி), மிக்கேல் ராயப்பன் (ராதாபுரம்), சுந்தர்ராஜன் (மத்தியமதுரை), தமிழ் அழகன் (திட்டக்குடி), சுரேஷ்குமார் (செங்கம்), சாந்திராஜமாணிக்கம் (சேந்தமங்கலம்) ஆகியோர் சந்தித்து தங்களின் தொகுதி பிரச்னைகுறித்து மனு கொடுத்தனர்.
இதனிடையே, தே.மு.தி.க. தலைமை மீது அதிருப்தியில் இருந்த பாண்டியராஜன், கட்சி நிகழ்ச்சிகளையும் புறக்கணித்து வந்தார்.
இந்த நிலையில், இன்று விருதுநகர் சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் பாண்டியராஜன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை இன்றுசந்தித்து பேசினார்.
இவரை சேர்த்து மொத்தம் 7 தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் முதல்வரை சந்திக்க இருப்பதாகவும்தகவல்கள் வெளியாகி உள்ளது. தே.மு.தி.க.வுக்கு மொத்தம் 29 எம்எல்ஏக்கள்இருந்தனர். இதில், 7 எம்எல்ஏக்கள் அதிமுக பக்கம் சாய்ந்துவிட்டனர். இதனால்தற்போது தேமுதிகவின் பலம் 22 ஆக குறைந்துள்ளது.