Home நாடு கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறை தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – தர்மேந்திரன் குடும்பம்...

கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறை தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – தர்மேந்திரன் குடும்பம் புகார்

611
0
SHARE
Ad

lawyer-june13கோலாலம்பூர், ஜூன் 13 – தடுப்புக் காவலில் இறந்த தர்மேந்திரனின் மரணத்தில் நேர்மாறான அறிக்கை விடுத்த கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறை தலைவர் கு சின் வா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தர்மேந்திரனின் மனைவி மேரி மரியா சூசை புகார் அளித்துள்ளார்.

கடந்த மே மாதம் 22 ஆம் தேதி கு சின் வெளியிட்ட அறிக்கை, கோலாலம்பூர் பொது மருத்துவமனையின் மருத்துவ அறிக்கைக்கு நேர்மாறானது என்றும் மேரி தெரிவித்துள்ளார்.

“எனது கணவரின் கொலையை மறைக்கும் நோக்கில் தான் கு சின் தவறான அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்று நானும், எனது குடும்பத்தினரும் நம்புகிறோம்” என்று மேரி இன்று புக்கிட் அமான் காவல் தலைமையகத்தில் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த மே மாதம் 21 ஆம் தேதி தடுப்புக்காவலில் தர்மேந்திரன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் குறித்து கு சின் வெளியிட்ட அறிக்கையில் மூச்சு திணறல் காரணமாக தர்மேந்திரன் மரணமடைந்தார் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.