இந்நிலையில் நேற்று வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கருணாநிதியின் உடலில் 49 காயங்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
உடலில் ஏற்பட்டுள்ள பலத்த காயங்களின் காரணமாகத் தான் கருணாநிதி இறந்ததாகவும், சற்று விரைவாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருந்தால் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம் என்றும் கருணாநிதியின் சகோதரர் இளஞ்செழியன் கூறினார்.
மேலும் கண்காணிப்புக் கேமெரா(புகைப்படக் கருவி) மூலம் சோதனையிட்டதில் கருணாநிதி எந்த விதமான சித்திரவதைகளுக்கும் உள்ளாகவில்லை என்று நெகிரி செம்பிலான் காவல்படைத் தலைவர் டத்தோ ஒஸ்மான் ஹாஜி சாலே உண்மைக்குப் புறம்பாக பத்திரிக்கைகளுக்கு செய்தி வெளியிட்டது இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது என்றும் இளஞ்செழியன் தெரிவித்தார்.
தனது தம்பியின் மரணத்திற்குக் காரணமான காவல்துறையினர் மீதும், உண்மையை மூடி மறைத்து நேர்மாறான அறிக்கை விடுத்த காவல்படைத் தலைவர் மீதும் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இளஞ்செழியன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.