Home 13வது பொதுத் தேர்தல் “அழியா மை அழிந்தது தான் என் வாழ்வில் சோகமான கட்டம்” – அஸீஸ் வருத்தம்

“அழியா மை அழிந்தது தான் என் வாழ்வில் சோகமான கட்டம்” – அஸீஸ் வருத்தம்

611
0
SHARE
Ad

Abdul Aziz Mohd Yusoffகோலாலம்பூர், ஜூன் 18 – அழியா மை அழிந்த விவகாரம் தான் என் வாழ்வில் ஏற்பட்ட சோகமான கட்டம் என்று தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அஸீஸ் முகமட் யூசோப்(படம்) தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியா மை, இடப்பட்ட ஒரேநாளில் எளிதாக அழிந்தது குறித்து தான் மிகவும் ஏமாற்றம் அடைந்ததாகவும் அஸீஸ் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அழியா மை அழிந்த காரணத்தால், அதன் மூலம் வாக்காளர்கள் ஒருமுறைக்கு மேல் வாக்களித்தனர் என்று தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்கட்சிகள் பழி போடுவதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அஸீஸ் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பொதுத்தேர்தலில் அந்த மையைப் பயன்படுத்துவதற்கு முன்னர் தாங்கள் பலமுறை சோதனை செய்ததாகவும் அஸீஸ் குறிப்பிட்டுள்ளார்.