Home நாடு நஜிப் தலைமையில் பொருளாதாரக் கொள்கைகளை நிர்வகிக்க புதிய குழு – நிதி பற்றாக்குறையை குறைக்க முடிவு!

நஜிப் தலைமையில் பொருளாதாரக் கொள்கைகளை நிர்வகிக்க புதிய குழு – நிதி பற்றாக்குறையை குறைக்க முடிவு!

603
0
SHARE
Ad

Najibபுத்ரா ஜெயா, ஜூன் 18 – நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை நிர்வகிக்க அமைச்சர்கள் மற்றும் அரசாங்க தலைமை அதிகாரிகள் அடங்கிய புதிய குழுவிற்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் தலைமையேற்றுள்ளார்.

“இந்த குழுவின் நோக்கம், வரும் 2015 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் நிதி பற்றாக்குறையை 3 சதவிகிதம் குறைப்பதோடு, உள்நாட்டு பொருளாதாரத்தின் வளர்ச்சியையும், உருமாற்றுத் திட்டங்களையும் பாதிக்காத வகையில் அதை செயல்படுத்துவது தான்” என்று இன்று நடைபெற்ற 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு  கூட்டத்தில் பிரதமர் நஜிப் அறிவித்தார்.

மேலும் “இந்தக் குழு நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை நிர்வகிப்பதில் கடும் முயற்சிகளை மேற்கொள்ளும்.அதேவேளை அரசாங்கமும் கடந்த ஆண்டு நிலவி வந்த 4.5 சதவிகித நிதிப் பற்றாக்குறையை, இவ்வருடம் 4 சதவிகிதமாக மாற்றும்” என்று நஜிப் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice