Home கலை உலகம் இந்தியில் சாதித்த தனுஷ்: தமன்னா பாராட்டு

இந்தியில் சாதித்த தனுஷ்: தமன்னா பாராட்டு

894
0
SHARE
Ad

ஜூன் 26- தனுஷ் இந்தியில் நடித்த ‘ராஞ்சனா’ படம் வெளியிட்டு வெற்றிகரமாக ஓடுகிறது. இதற்கு நடிகை தமன்னா மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

dhanushசினிமா எல்லைகளை கடந்து விட்டது. முன்பெல்லாம் தென் இந்திய நடிகர், நடிகைகள் இந்தியில் பிரபலமாவது கடினம். ஹேமமாலினி, ஸ்ரீதேவி என குறிப்பிட்ட சிலரே அங்கு ஜெயித்தனர். ஆனால் இப்போது எல்லோராலும் இந்திப் படங்களில் நடிக்க முடிகிறது.

தனுசும் இந்தியில் நடித்து சாதித்துவிட்டார். அவரது இந்திப்படமான ‘ராஞ்சனா’ வெற்றிகரமாக ஓடுகிறது. தனுசுடன் தமிழ் படத்தில் நான் நடித்துள்ளேன். சக நடிகரான அவர் இந்தியில் சாதித்தது பெருமையாக உள்ளது. நானும் இந்திப் படங்களில் நடிக்கிறேன், என்னைப்போல் வேறு பல தென் இந்திய நடிகைகளும் இந்திப் படங்களில் நடிக்கின்றனர்.

#TamilSchoolmychoice

ஸ்ருதி, இலியானா என் தோழிகள். அவர்களும் இந்தியில் நடிக்கிறார்கள். தனுஷ் உள்ளிட்ட தென்னிந்திய நடிகர், நடிகைகளுக்கு இந்தி திரையுலகில் பாராட்டுகள், படவாய்ப்புகளும் குவிகின்றன. இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. தென்னிந்திய நட்சத்திரங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. படஉலகை தமிழ், தெலுங்கு, இந்தி என பிரித்து பேசும் முறை மாறி வருகிறது. இவ்வாறு தமன்னா கூறினார்.