Home நாடு நாடெங்கிலும் புகைமூட்டத்தின் அளவு குறைந்து வருகிறது!

நாடெங்கிலும் புகைமூட்டத்தின் அளவு குறைந்து வருகிறது!

506
0
SHARE
Ad

Haze in Malaysia.கோலாலம்பூர், ஜூன் 26 – தீபகற்ப மலேசியாவில் பல இடங்களில் நேற்று இரவு பெய்த இடியுடன் கூடிய மழையின் காரணமாக காற்றின் மாசு அளவு குறைந்துள்ளது. இன்று காலை 7.00 மணி அளவிலான சுகாதாரத்துறையின் அறிக்கையின் படி பல இடங்களில் காற்றின் மாசு அளவு (Air Pollutant Index -API) அபாயக்கட்டத்தில் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், கிள்ளான் பள்ளத்தாக்கு, நெகிரி செம்பிலான், பேராக் உள்ளிட்ட 13 பகுதிகளில் காற்றில் ஆரோக்கியமற்ற சூழல் நிலவுவதாகவும், நாட்டில் மற்ற இடங்களில் காற்றில் மாசு அளவு இயல்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நேற்று கிள்ளான் துறைமுகத்தில் 484 (API) ஆகப் பதிவாகி இருந்தது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் அபாயக் கட்டத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று காலை எடுக்கப்பட்ட ஏ.பி.ஐ கணக்கின்படி கிள்ளான் துறைமுகத்தில் 140 மற்றும் புக்கிட் ரம்பாய்(மலாக்கா), நிலாய், போர்டிக்சன், சிரம்பான் ஆகிய பகுதிகளில் 100 ஆகவும் பதிவாகி ஆரோக்கியமற்ற சூழலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கோலாலம்பூரில் இன்று காலைய நிலவரப்படி செராஸ் மற்றும் பத்து மூடா ஆகிய பகுதிகளில் 101 ஆகவும், நாட்டில் பல்வேறு இடங்களில் புகைமூட்டம் குறைந்தும் காணப்பட்டது.