Home உலகம் ரஷ்யாவிலிருந்து ஸ்னோடெனை நாடுகடத்த முடியாது: அமெரிக்காவிற்கு புதின் மறுப்பு

ரஷ்யாவிலிருந்து ஸ்னோடெனை நாடுகடத்த முடியாது: அமெரிக்காவிற்கு புதின் மறுப்பு

526
0
SHARE
Ad

மாஸ்கோ, ஜூன் 26- அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் உலக நாடுகளின் இணைய பயன்பாட்டாளர்களின் தகவல்களை வேவு பார்த்தது குறித்த விபரங்களை எட்வர்ட் ஸ்னோடென் வெளியிட்டார். மேலும் கூகுள், ஃபேஸ்புக் போன்ற இணைய தளங்கள் அமெரிக்காவுக்கு உதவுவதாகவும் கூறினார்.

Vladimir-Putinஅவர் மீது அமெரிக்கா தேச துரோக குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியேறிய அவர் ஹாங்காங் சென்றார். அங்கிருந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ சென்றார்.

உலக நாடுகள் ஸ்னோடெனுக்கு அடைக்கலம் வழங்கக் கூடாது என அமெரிக்கா கேட்டுக்கொண்டது. இதைத் தொடர்ந்து ரஷ்யா, ஸ்னோடெனை அமெரிக்காவிற்கு நாடுகடத்தவும் கேட்டுக்கொண்டது.

#TamilSchoolmychoice

இந்த நிலையில் மாஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் புதின், வெளிநாடுகள் செல்லும் நோக்கில் ஸ்னோடென் மாஸ்கோவில் இருக்கிறார். ஸ்னோடென் எந்த ரஷ்ய கொள்கைகளுக்கு எதிராகவோ அல்லது ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளுடனோ அவருக்கு எந்த தொடர்பும் கிடையாது.

ஆகையால் அவரை நாடுகடத்தனும் என்கிற அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்கமுடியாது என்று புதின் மறுப்பு தெரிவித்துள்ளார்.