Home நாடு ‘ஐபிசிஎம்சி’ யை உடனடியாக அமைக்க வேண்டும் – உயர்நீதிமன்ற நீதிபதி வலியுறுத்தல்

‘ஐபிசிஎம்சி’ யை உடனடியாக அமைக்க வேண்டும் – உயர்நீதிமன்ற நீதிபதி வலியுறுத்தல்

552
0
SHARE
Ad

kuhan

கோலாலம்பூர், ஜூன் 26 – அதிகரித்து வரும் தடுப்புக் காவல் மரணங்களைக் கருத்தில் கொண்டு, காவல்துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையத்தை (Independent Police Complaints and Misconduct Commission – IPCMC) ஐ உடனடியாக அமைக்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி வி.டி. சிங்கம் தெரிவித்துள்ளார்.

“அரச விசாரணை ஆணையத்தின் பரிந்துரையை கிடப்பில் போடக்கூடாது. காவல்துறையின் தலையீடு இன்றி, சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் (தடுப்புக்காவலில் இறந்தவர்களின் குடும்பம் உட்பட), சமமான நீதி கிடைக்கும் வகையில் இந்த சார்பற்ற ஆணையம் மிக விரைவில் செயல்படத் தொடங்க வேண்டும்” என்றும் சிங்கம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இன்று குகனின் மரணம் குறித்த சிவில் வழக்கில் தீர்ப்பளிக்கும் போது, நீதிபதி சிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.