Home நாடு குத்துச்சண்டை வீரரைத் தாக்கிய வழக்கில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 4 ஆண்டுகள் சிறை!

குத்துச்சண்டை வீரரைத் தாக்கிய வழக்கில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 4 ஆண்டுகள் சிறை!

593
0
SHARE
Ad

downloadஜோகூர், ஜூன் 28 – தேசிய குத்துச்சண்டை வீரரைத் தாக்கி கடுமையான காயங்களை ஏற்படுத்திய வழக்கில், அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், அவருடன் சேர்த்து அவரது நண்பர்கள் இருவருக்கும் ஜோகூர் பாரு நீதிமன்றம் இன்று 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

துங்கு நிக் தாஸுடின் இஸ்வான் ஷியா துங்கு காடிர் (வயது 28),அலெக்ஸ் பூ ஹீ வீ (வயது 42), முகமட் ஆரிப் ஹுசைன் (வயது 36) ஆகிய மூவரும், குத்துச்சண்டை வீரரான பார்கானை காரணமின்றித் தாக்கி காயம் விளைவித்ததாகக் கூறி நீதிபதி ஸாம்ரி பக்கார் அவர்களுக்கு அந்த தண்டனையை வழங்கினார்.

அவர்கள் மூவரும் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதாகக் கூறி, தண்டனையை நிறுத்தி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்த போதும் நீதிபதி அதை ஏற்றுக்கொள்ள மறுத்தார்.

#TamilSchoolmychoice

2009 ஆம் ஆண்டு லாஸ் சீ விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றவரான பார்கான்(படம்), அரச குடும்பத்தைச் சேர்ந்த துங்கு நிக் தாஸுடின் மற்றும் அவரது நண்பர்களால் கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி மரக்கட்டை மற்றும் இரும்பு கம்பி கொண்டு தாக்கப்பட்டார்.

அதில் அவரது தாடை எலும்பு முறிந்தது. இதனால் கடந்த வருடம் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்பைத் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.