Home வணிகம்/தொழில் நுட்பம் டோனி பெர்னாண்டஸுக்கு “வாழ் நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது!

டோனி பெர்னாண்டஸுக்கு “வாழ் நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது!

761
0
SHARE
Ad

tony_fernandez(1)கோலாலம்பூர், ஜூலை 1 – ஏர் ஆசியா விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸுக்கு, சென்னையில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விமான சேவைத் துறையில் அனைத்துலக அளவில் அவர் ஆற்றியுள்ள பங்களிப்புக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில்,கடந்த சனிக்கிழமை சென்னையிலுள்ள ஹிந்துஸ்தான் குழுமம் அவருக்கு ‘டாக்டர் கே.ஜி.சி. வெர்கிஸ் இன் வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கியது.

அந்த குழுமத்தைத் தோற்றுவித்தவரான மறைந்த டாக்டர் கே.ஜி.சி. வெர்கிஸ் அவர்களின் நினைவாக, கடந்த ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இவ்விருதைப் பெறுவதற்காக இந்தியா சென்றுள்ள டோனி பெர்னாண்டஸ், கொச்சின், மும்பை, புதுடில்லி ஆகிய மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

அதோடு இந்தியாவுக்கான ஏர் ஆசியா உரிமம் பற்றி விவாதிப்பதற்கு, இந்தியாவின் வானூர்தித் துறை அமைச்சர் அஜித் சிங்கையும் சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.