Home நாடு இன்னும் அச்சுப் பத்திரிக்கை ஊடகம்தான் மலேசியாவில் முன்னிலை – ஆய்வுகள் கூறுகின்றன

இன்னும் அச்சுப் பத்திரிக்கை ஊடகம்தான் மலேசியாவில் முன்னிலை – ஆய்வுகள் கூறுகின்றன

563
0
SHARE
Ad

Newspapers-sliderகோலாலம்பூர், ஜூலை 1 – இணையத்தின் வளர்ச்சியால், இணையம் வழி படிக்கப்படும் செய்திகளும், செய்தி வலைத் தளங்களும் பெருமளவில் பெருகி விட்டாலும், மலேசியாவில் இன்னமும் விளம்பரதாரர்களைப் பொறுத்தவரை அச்சுப் பத்திரிக்கைகள்தான் முன்னிலை வகிக்கின்றன.

#TamilSchoolmychoice

நாளுக்குள் நாள் அச்சுப் பத்திரிக்கைகளின் வழி தரப்படும் விளம்பரங்கள் பெருகி வருகின்றன.

வாசகர்களைப் பொறுத்தவரை அவர்கள் இணைய விளம்பரங்கள் என்றோ, தொலைக்காட்சி விளம்பரங்கள் என்றோ, பத்திரிக்கை விளம்பரங்கள் என்றோ பிரித்துப் பார்ப்பதில்லை.

மாறாக, பார்ப்பதற்கு வசதியாக இருப்பது, உடனுக்குடன் துரிதமாக பார்க்க முடிவது, விளம்பரத்தின் மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து விளம்பரங்கள் வாசகர்களிடையே வெற்றி பெறுவதாக, விளம்பர நிறுவனங்கள் கூறுகின்றன.

வாசகர்கள் தங்களின் தகவல்களுக்காகவும், செய்திகளுக்காகவும், செய்தி ஆய்வுக் கட்டுரைகளுக்காகவும் இன்னும் பத்திரிக்கைகளையே நாடுவதால் பத்திரிக்கைகளில் விளம்பர வருவாய்க்கான வாய்ப்புகள் இன்னும் பிரகாசமாகவே இருக்கின்றன என்றும் விளம்பர நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, நவீன தொழில் நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஸ்டார் ஆங்கிலப் பத்திரிக்கை போன்ற தகவல் ஊடகங்கள் இந்த துறையில் வெற்றிகரமாக பவனி வருகின்றன.

தகவல் ஊடகங்கள் மீதான ஆய்வுகள் நடத்தும் நெல்சன் நிறுவனத்தின் ஆய்வுகளின் மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் நாட்டின்விளம்பர வருமானம் 4.08 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 4.84 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பகுதி அதாவது சுமார் 41 சதவீதம் அச்சுப் பத்திரிக்கைகளுக்கு கிடைத்தது.

நெல்சன் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி பத்திரிக்கைகளின் மூலம் செய்யப்பட்ட விளம்பரங்களுக்கு நல்ல பிரதிபலன் கிடைத்ததாக தெரியவருகின்றது.

குறிப்பாக, பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்புடைய புதிய வீடமைப்புத் திட்டங்களுக்கான விளம்பரங்களுக்கு பத்திரிக்கைகளின் வழி நல்ல பிரதிபலன்கள் கிடைத்துள்ளன.

செய்திகள் என்று வரும்போது இணைய வலைத் தளங்களை நாடும் வாசகர்கள், விளம்பரங்கள் என்று வரும்போது அச்சுப் பத்திரிக்கைகளையே நாடுகின்றார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகியுள்ளது.