Home உலகம் எகிப்தில் ராணுவ எச்சரிக்கையை நிராகரித்தார் அதிபர் மோர்ஸி

எகிப்தில் ராணுவ எச்சரிக்கையை நிராகரித்தார் அதிபர் மோர்ஸி

636
0
SHARE
Ad

கெய்ரோ, ஜூலை 3-  எகிப்தில் மக்கள் போராட்டத்துக்கு தீர்வு காணக்கோரி ராணுவம் விடுத்த 48 மணி நேரக் கெடு எச்சரிக்கையை அதிபர் முகமது மோர்ஸி செவ்வாய்க்கிழமை நிராகரித்தார்.

தனது திட்டத்தின்படி நாட்டை மறுசீரமைப்பு செய்யும் பணிகளைச் தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாகவும், எந்தச் சூழ்நிலையிலும் நாடு பின்னோக்கிச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

egyptஅதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் 48 மணி நேரத்துக்குள் இதற்கு தீர்வு காணாவிட்டால் ராணுவம் தலையிடும் என்று திங்கள்கிழமை ராணுவ தரப்பில் அறிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை அதிபர் மாளிகை தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜனநாயகப் பாதையில் திரும்பியுள்ள நாட்டைப் பாதுகாக்க தேசிய சக்திகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mohamed Morsi, president of Egyptராணுவத்தின் இதுபோன்ற அறிவிப்புகள் நாட்டைப் பிளவுபடுத்துவதுடன், சமூக அமைதியின்மைக்கும் வழிவகுத்துவிடும் என்று அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

சலாபி நௌர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஷாபான் அப்தல் ஆலிம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபருக்கு எதிராக ராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கை மீண்டும் இங்கு ராணுவ ஆட்சி ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அதிபருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள “தமரோடு’ அமைப்பின் நிறுவனர் மக்மூத்பாதிர் கூறுகையில், ராணுவத்தின் அறிவிப்புக்கு தலை வணங்குவதாகவும், இது நாட்டின் மீது ராணுவத்துக்கு உள்ள பற்றை பறைசாற்றுவதாக உள்ளது’ என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், அதிபருக்கு எதிராக விடுக்கப்பட்டது எச்சரிக்கை இல்லை என்றும், நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையற்றதன்மைக்கு அரசியல்வாதிகள் விரைவாக தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

ஒபாமா அழைப்பு:-

obamaதான்சானியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, எகிப்து விவகாரம் தொடர்பாக கூறுகையில், ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கும் அந் நாடு (எகிப்து) அதே பாதையில் செல்ல துணை நிற்போம்.

அங்கு அதிபர் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அதேநேரம் மக்களின் எண்ணங்களுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பளிப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.