Home இந்தியா மோடி பிரதமராக அதிக ஆதரவு: கருத்து கணிப்பில் தகவல்

மோடி பிரதமராக அதிக ஆதரவு: கருத்து கணிப்பில் தகவல்

870
0
SHARE
Ad

புதுடெல்லி, ஜுலை 5- வருகிற பாராளுமன்ற தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? என்று ஆங்கில பத்திரிகை ஒன்று கருத்து கணிப்பு நடத்தி உள்ளது. இந்த கருத்து கணிப்பில் கிடைத்துள்ள தகவல்கள் வருமாறு:-

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 197 இடங்களை கைப்பற்றும். காங்கிரஸ் கூட்டணிக்கு 184 இடங்கள் கிடைக்கும். இதர கட்சிகள் 162 இடங்களில் வெற்றி பெறும். காங்கிரஸ் கூட்டணி கடந்த தேர்தலில் 37.2 சதவீதம் வாக்குகள் பெற்றது. ஆனால் இந்த தேர்தலில் 31.7 சதவீதம் வாக்குகளாக குறையும்.

MODIபா.ஜனதா கூட்டணியின் வாக்கு வங்கி விகிதம் கடந்த தேர்தலில் 23.3 சதவீதமாக இருந்தது. வருகிற தேர்தலில் 26.7 சதவீதமாக அதிகரிக்கும். 32 சதவீத மக்கள் நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

மன்மோகன் சிங்குக்கு 15 சதவீதம் பேரும், ராகுல்காந்திக்கு 12 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். சோனியாவுக்கு 8 சதவீதம் பேரும் அத்வானி மற்றும் மாயாவதிக்கு ஆதரவாக 5 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பா.ஜனதா கட்சியினரிடம் நடத்திய கருத்து கணிப்பில் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் மோடி என்று 56 சதவீதம் பேர் கருத்து கூறி உள்ளனர். அத்வானிக்கு 15 சதவீதம் பேரும், சுஷ்மாசுவராஜீக்கு 10 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ராகுல் காந்தியே பிரதமர் ஆக வேண்டும் என்று 39 சதவீதம் பேரும் மன்மோகன்சிங்குக்கு ஆதரவாக 25 சதவீதம் பேரும், சோனியாவுக்கு ஆதரவாக 18 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

நிதி மந்திரி ப.சிதம்பரத்துக்கு 5 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. 3-வது அணி உருவானால் நிதீஷ்குமார் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று 19 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.