Home அரசியல் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் : ஆபாச வலைப்பதிவாளர்களுக்கு ஜசெக ஆதரவு இருப்பதாக ராடின் கருத்து!

நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் : ஆபாச வலைப்பதிவாளர்களுக்கு ஜசெக ஆதரவு இருப்பதாக ராடின் கருத்து!

574
0
SHARE
Ad

bunga mokhtarகோலாலம்பூர், ஜூலை 16 – இஸ்லாம் மதத்தினரின் புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வை இழிவு படுத்தும் விதமாக, வலைத்தளங்களில் படங்களை பதிவேற்றம் செய்த அல்வின் டான் மற்றும் விவியன் லீ என்ற இரு ஆபாச வலைப்பதிவாளர்களின் செயலால் இன்று நாடாளுமன்றத்தில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அவர்களின் இது போன்ற இஸ்லாம் மதத்தை இழிவு படுத்தும் பதிவுக்கு ஜசெக கூட காரணமாக இருக்கலாம் என்று தேசிய முன்னணியைச் சேர்ந்த கினாபாத்தாங்கான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்  பங் மொக்தார்  ராடின் (படம்) கருத்து கூற, அதைக் கேட்ட ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் கோபமடைந்தனர்.

ராடினின் கருத்துக்கு, ஜசெக வைச் சேர்ந்த பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார், சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக், தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கா கோர் மிங் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

“உங்கள் அவதூறான கருத்தை மீட்டுக்கொள்ளுங்கள்” என்று கோர் மிங் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்த ராடின், “13 வது பொதுத்தேர்தலுக்குப் பிறகு இது போன்ற நிலை காணப்படுவதால். அதற்கு ஜசெக ஆதரவு இருப்பதற்கு சாத்தியம் இருப்பதாக மட்டுமே கூறினேன். மாறாக குற்றம் சாட்டவில்லை” என்று தெரிவித்தார்.