ஜூலை 18- விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கிற படம் அவருக்கு 53-வது படம்.
இந்தப் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்து வெளியாகும் நிலையில் உள்ளது. இன்னமும் பெயரிப்படாத இப்படத்தில் ஆர்யா, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இயக்குனர் சிவாவின் வேகமும், திட்டமிடுதலும் நடிகர் அஜித்-ன் ஒத்துழைப்பும் இப்படம் திட்டமிட்டதைபோலவே 2014ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட முடியும் என நம்பிக்கையுடன் உள்ளதாக தயாரிப்பு வட்டாரம் கூறுகிறது.
இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இப்படத்தில் அஜீத், தமன்னா ஜோடியுடன் ஆடி பாடும் 2 பாடல் காட்சிகள் ஸ்விட்சர்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளது. கடுங்குளிரையும் பொருட்படுத்தாது அஜித் எளிமையாக இப்படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம். இது படக்குழுவினரை மேலும் உற்சாகமூட்டியதாம். இப்படத்தில் சந்தானம், பாலா, விதார்த், ‘நாடோடிகள்’ அபிநயா, ரமேஷ் கண்ணா, இளவரசு, அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பொங்கல் நாளில் ‘தல’-‘தளபதி’ ஆகியோரின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது ரசிகர்களிடேயே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அடுத்த வருட பொங்கல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.