Home உலகம் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமண சட்ட மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி ஒப்புதல்

ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமண சட்ட மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி ஒப்புதல்

648
0
SHARE
Ad

லண்டன், ஜூலை 18- பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் சில மாநிலங்கள் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு அங்கீகாரம் அளித்ததையடுத்து இங்கிலாந்திலும் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துக்கொண்டு சேர்ந்து வாழ்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வந்தது.

Investec Derby Festivalஇதுதொடர்பாக ஆளும் கட்சி எம்.பி.க்களுக்கிடையே கருத்து பேதம் ஏற்பட்டதால் இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடித்தது. பல ஆண்டு கால தடைகளை முறியடித்து பாராளுமன்ற கீழ்சபையில் ஓட்டெடுப்பின் மூலம் இந்த மசோதா வெற்றி பெற்றது.

மேல்சபையான பிரபுக்கள் சபையில் சிறிய விவாதத்திற்கு பின்னர் ஓட்டெடுப்பு இல்லாமல் இந்த மசோதா நிறைவேறியது.

#TamilSchoolmychoice

இங்கிலாந்து நாட்டு சட்டப்படி, எல்லா மசோதாக்களும் இங்கிலாந்து ராணியின் ஒப்புதல் பெற்ற பின்னரே சட்டமாக முடியும். எனவே, இந்த சட்ட மசோதா ராணியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

இந்த மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதற்கான அறிவிப்பு நேற்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட போது எம்.பி.க்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இதனையடுத்து, ஓரின சேர்க்கையாளர்கள் தேவாலயங்களில் திருமணம் செய்துக்கொண்டு சேர்ந்து வாழ்வதற்கு இங்கிலாந்தில் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் அடுத்த (2014) ஆண்டு துவக்கத்தில் முதல் ஓரினச் சேர்க்கையாளர் திருமணம் இங்கிலாந்தில் நடைபெறும் என தெரிகிறது.