Home அரசியல் தீபக் ஜெய்கிஷன் “காட்டிக் கொடுக்கும்” சாட்சியாக மாற அரசாங்க தலைமை வழக்கறிஞரிடம் விண்ணப்பம்

தீபக் ஜெய்கிஷன் “காட்டிக் கொடுக்கும்” சாட்சியாக மாற அரசாங்க தலைமை வழக்கறிஞரிடம் விண்ணப்பம்

896
0
SHARE
Ad

Deepak-jaikishen-sliderபிப்ரவரி 6 – குற்றச் செயல்களைக் காட்டிக் கொடுக்கும் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் கீழ், ஒரு முக்கியமான “பெரிய” தலைவர் சம்பந்தப்பட்ட ஏய்ப்பு வழக்கொன்றில்  தனக்கு பாதுகாப்பு வழங்கும்படி அரசாங்கத் தலைமை வழக்கறிஞரிடம் விண்ணப்பிக்கப் போவதாக சர்ச்சைக்குரிய கம்பள வணிகர் ஜெய்கிஷன் (படம்) தெரிவித்துள்ளார்.

இன்று காலை பாஸ் கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு நடத்திய தீபக் பாஸ் தலைவர்கள் தனக்கு இவ்வாறு ஆலோசனை கூறியதாக தெரிவித்தார்.

சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தீபக்கிற்கு ஏற்கனவே போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதால் வேறு யாரும் அவருக்கு பாதுகாப்பு குறித்த உத்தரவாதம் தர வேண்டியதில்லை என்று பாஸ் தலைவர்கள் தன்னிடம் கூறியதாகவும் தீபக் கூறினார்.

#TamilSchoolmychoice

பிரதமர் நஜிப்பின் அரசாங்கத்திடமிருந்து தனக்கு எந்தவித உதவியும் கிடைக்காது என்பதால், பாஸ் கட்சியின் உதவியை தான் நாடியதாக தீபக் தெரிவித்துள்ளார்.

பாஸ் கட்சியின் ஆலோசனையைத் தொடர்ந்து தான் அரசாங்கத் தலைமை வழக்கறிஞருக்கு கடிதம் எழுதப் போவதாகவும், கூடிய விரைவில் தமக்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தீபக் கூறியுள்ளார்.

இந்த பிரச்சனை தொடர்பாக தீபக் இன்று கூட்டிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஓமார், வழக்கறிஞர் அஸ்முனி அவி, பாஸ் துணைத் தலைமைச் செயலாளர் சைட் அஸ்மான் சைட் அஹ்மாட் நவாவி, மற்றும் கோலசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுல்கிப்ளி அஹ்மாட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த பிரச்சனை குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த பிகேஆர் கட்சியின் வியூக இயக்குநர் ரஃபிசி, காட்டிக் கொடுக்கும் சாட்சிக்குரிய பாதுகாப்பை தீபக் கோர விரும்பினால் அவர் தன்னிடம் உள்ள தகவலை பொதுமக்களுக்கு வழங்கக் கூடாது.

மாறாக போலீஸ் அல்லது ஊழல் தடுப்பு ஆணையத்திடம் மட்டும் தான் வழங்க முடியும். அப்போதுதான் அவருக்கு காட்டிக் கொடுக்கும் சாட்சிக்குரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் ரஃபிசி கூறியுள்ளார்.